போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
x

கோப்புப்படம்

போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் கால்துறையினர் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியதால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரேத பரிசோதனை நடத்த மருத்துவர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற சென்னை ஐகோர்ட்டு, 3 மாதங்களில் விசாரணையை முடித்து, வழக்கின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.


Next Story