மதுரை நவனேரி கால்வாயில் கழிவுநீர் கலப்பதாக வழக்கு - பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை நவனேரி கால்வாயில் கழிவுநீர் கலப்பதாக வழக்கு - பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
x

நவனேரி வாய்க்காலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் எஸ்.கள்ளம்பட்டி அருகே உள்ள நவனேரி கண்மாய் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதாகவும், வாய்க்காலை சீர் செய்து முறையாக பராமரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

1 More update

Next Story