மதுரையில் அவதூறாக பேசிய அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்; எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு


மதுரையில் அவதூறாக பேசிய அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்;   எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 12 March 2023 10:04 AM IST (Updated: 12 March 2023 11:47 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடப்பாடி பழனிசாமியை அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ததாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story