அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு


அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு  - தீர்ப்பு தள்ளிவைப்பு
x

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தினங்களாக காரசார வாதங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்னை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Next Story