வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு


வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
x

சுப்ரீம் கோர்ட்டில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ண உத்தரவிடக்கோரி பாக்கியராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Next Story