தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு


தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 12:30 AM IST (Updated: 13 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வடக்கு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் அய்யப்பன் (வயது 45). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வனத்திருப்பதி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். பன்னம்பாறை சாய்பாபா கோவில் அருகில் வரும் போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அய்யப்பன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் வழக்குபதிந்து, 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்.


Next Story