புளுதியூர் வாரச்சந்தையில் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை


புளுதியூர் வாரச்சந்தையில் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
x
தினத்தந்தி 8 Jun 2023 1:00 AM IST (Updated: 8 Jun 2023 6:40 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனிடையே நேற்று கூடிய சந்தைக்கு வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்தனர். அவர்கள் கால்நடைகளை போட்டி போட்டு வாங்கினர். சந்தையில் மொத்தம் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story