வாலாஜாவிற்கு காவிரி குடிநீர் வழங்கிட வேண்டும்- நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
வாலாஜாவிற்கு காவிரி குடிநீர் வழங்கிட வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வாலாஜா
வாலாஜாவிற்கு காவிரி குடிநீர் வழங்கிட வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
வாலாஜாபேட்டை நகராட்சியில் நகரமன்ற கூட்டம் தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது துணைத்தலைவர் கமல ராகவன், ஆணையாளர் (பொறுப்பு) பரமுராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் தியாகராஜன் பேசுகையில் தனது வார்டில் குளியலறை மற்றும் கழிப்பிட கட்டிட பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டது என்றார். துணை தலைவர் கமல் ராகவன், கவுன்சிலர் சுமதி பேசுகையில், ''பாலாற்று குடிநீரில் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதால் மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு காவிரி குடிநீர் வழங்கிட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டனர்.
கவுன்சிலர் செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் வாலாஜாவில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கவுன்சிலர் ரவிச்சந்திரன் தனது வார்டில் தூய்மை பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் துப்புரவு பணி செய்வதில்லை என்றார் பின்னர் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.