காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் 10-ந் தேதி வரை நிறுத்தம்


காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் 10-ந் தேதி வரை நிறுத்தம்
x

காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் 10-ந் தேதி வரை நிறுத்தம் செய்யப்படுவதால் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துமாறு ராணிப்பேட்டை நகராட்சி வேண்டுகோள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் காவிரி கூட்டுக் குடிநீர் பைப்லைன்களில் பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மே மாதம் 23-ந் தேதி பராமரிப்பு பணி தொடங்கியது. வருகிற 10-ந் தேதி வரை மேட்டூரில் பொதுப்பணித்துறை சார்பில் காவிரி கூட்டுக் குடிநீர் பைப்லைன் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யும் பணி தடைபட்டுள்ளது. எனவே வருகிற 10-ந் தேதி வரை காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் இருக்காது. இதை சமாளிக்க ராணிப்பேட்டை பாலாற்றிலிருந்து அதிக அளவில் தண்ணீர் எடுத்து நகர மக்களுக்கு வினியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் நகராட்சியில் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story