வீராணத்துக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்


வீராணத்துக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்
x

வீராணத்துக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதானால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயருகிறது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 39.90 அடியாக உள்ளது. நேற்று சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 39 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பானத்துக்கு தண்ணீர் தேவைப்படாததால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர்அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 18-ந்தேதி கல்லணையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து கல்லணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்ட நிலையில், தஞ்சை மாவட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணைக்கு கடந்த 21-ந்தேதி வந்து சேர்ந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் 3 அடியில் தண்ணீர் உள்ளது. இதையடுத்து, கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 24-ந்தேதி வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், உருத்திர சோலை ஜீரோ பாயிண்ட் மதகு வழியாக வீராணம் ஏரியை வந்தடைந்தது.

இதனால் வீராணம் ஏரியின் நேற்றைய நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்து. தொடர்ந்து 18 நாட்களுக்கு நீர் வரத்து இருந்தால், ஏரி முழு கொள்ளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு தொியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story