சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்


சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்

கோயம்புத்தூர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை தொடங்க உள்ள நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் உத்தரவின் பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பிறகு விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story