சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி செல்வலட்சுமி சாதனை


சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி செல்வலட்சுமி சாதனை
x

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாணவி செல்வலட்சுமி சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவி செல்வலட்சுமி தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வலட்சுமியை பள்ளி தாளாளர் சி.கிங்ஸ்டன் பால்மாணிக்கம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஈ.ஜூலியா, தமிழ் ஆசிரியை ஜேஸ்மின் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்தினர். இதுகுறித்து மாணவி செல்வலட்சுமி கூறியதாவது:-

எனது தந்தை முத்துமாரியப்பன், தாயார் ராமலட்சுமி. நான் தொடர்ந்து இப்பள்ளியிலேயே படித்து வந்த நிலையில் பள்ளி வகுப்பு தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று வந்தேன். மற்ற பாடங்களை விட தமிழ் பாடத்தில் எப்போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று வந்ததை கண்டு எனது பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், தமிழ் ஆசிரியர் ஆகியோர் என்னை பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெறவேண்டும் என்று எனக்கு ஊக்கம் அளித்து பாடங்களை சொல்லி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து நான் மிகவும் ஆர்வத்துடன் படித்து வந்ததேன்.

தேர்வு முடிவில் நான் எதிர்பார்த்தது போன்று மாநில அளவில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கெல்லாம் காரணமாகவும், எனக்கு உறுதுணையாகவும் இருந்து உற்சாகம் ஊட்டிய பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story