குறுவட்ட தடகள போட்டி


குறுவட்ட தடகள போட்டி
x

குறுவட்ட தடகள போட்டி நடைபெற்றது.

திருச்சி

திருவெறும்பூர் ஒன்றியம் சார்பில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. காட்டூர், பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடக்கும் இந்த போட்டியில் 90-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பாய்லர் ஆலை பள்ளி மாணவர் முகிலன் முதலிடத்தை பிடித்தார். இதுபோல் 19 வயதுக்கு உட்பட்ட 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மாணவர் அரிகரன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட நீளம் தாண்டுதலில் காஜாமியான் பள்ளி மாணவர் சஞ்சய் முதலிடத்தை தட்டிச் சென்றார். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.


Next Story