குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
அரியலூர்
குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோகோ மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 14, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டியின் நடுவராக தினேஷ்குமார், செல்வம், இளவரசன், ரமேஷ், கலையரசி, ஜோஸ்பின் மேரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்தனர்.
Related Tags :
Next Story