காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 July 2023 12:21 AM IST (Updated: 17 July 2023 5:32 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சேலம்

புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

சேலம் புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் அருகேயும், அயோத்தியாப்பட்டணம் ெரயில்வே கேட் மற்றும் மாசி நாயக்கன்பட்டி காந்தி நகர் காலனி, வாழப்பாடி பஸ் நிலையம் அருகேயும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்களும், இலவச நோட்டு, பென்சில்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு சேலம் புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வக்கீல்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், தொழிற்சங்க தலைவர் சொக்கலிங்கம், ஆட்டையாம்பட்டி நகர தலைவர் வெங்கடேசன், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி தலைவர் தேவராஜன், அயோத்தியாபட்டணம் வட்டார தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் நல்ல தம்பி, முருகன், கணேசன், மாவட்ட செயலாளர்கள் முனுசாமி, கிருஷ்ணன், நாகராஜ், அகிலன், வாழப்பாடி வட்டார தலைவர் ராமச்சந்திரன், நகரத்தலைவர் ஷாஜகான், வீரபாண்டி வட்டார செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா சேலம் பள்ளப்பட்டியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை துணைத்தலைவர்அசரப் அலி தலைமை தாங்கி காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினர். இதில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிசாமி, மாநகர் மாவட்ட துணை தலைவர் திருமுருகன், மண்டல தலைவர்கள் நிஷார், சாந்தமூர்த்தி, கலைப்பிரிவு மாநில துணை தலைவர் யுவராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் விமலாதித்தன், செயலாளர் விஜய்கணேஷ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நேஷனல் எடிடோரியேட் போர்டு இயக்குனர் ஹேமலதா கலந்து கொண்டு கட்டாய கல்வி, இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்த காமராஜரை பற்றி பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நவபாரத் மெட்டல்ஸ்

சேலம் டவுனில் உள்ள நவபாரத் மெட்டல்ஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பொது மக்களுக்கு பொங்கல், காமராஜர் உருவப்படங்களை வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உரிமையாளர்சிமியோன் செல்வசிங் தலைமை தாங்கினார். இதில் ஜவகர் ஆசிர்வில்சன், ஜான் சாலமோன், டாக்டர் திலக்கிருபா பென்னி, ஜான்சன், சேகர் ஜெபசிங், தியோபிலஸ் நித்தியானந்தம், மிக்சர் பாஸ்கர், ஜான்சன் அருள்சிகாமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அமுதன் பால் செல்வசிங் செய்திருந்தார்.


Next Story