ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து குமரியில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து குமரியில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர்.

தண்டனை நிறுத்தி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து. இதனால் எம். பி. பதவியை இழந்த ராகுல்காந்தி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து குமரியில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

நடைக்காவு சந்திப்பில் ஊராட்சி தலைவர் கிறிஸ்டல் ஜாண், முன்சிறை வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பால்ராஜ் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கருங்கல்

இதுபோல் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கலில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. முன்னதாக கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் கருங்கல் சந்திப்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் மரிய அருள் தாஸ், பாலப்பள்ளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜெபர்சன், கிள்ளியூர் பேரூர் தலைவர் ஜெனில், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர் பிறைட் சிங், எட்வின் ஜோஸ், அஸ்வின், ஜெயகுமார் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளச்சல்

குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்கிரஸ் துணைத்தலைவர் பிரான்சிஸ், நகர மண்டல தலைவர் அந்திரியாஸ், மாவட்ட துணைத்தலைவர் லாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் குருந்தன்கோடு ஊராட்சி ஓன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வில்லுக்குறி

குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பொன் பால்துரை தலைமையில் வில்லுக்குறியில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு வட்டார செயல் தலைவர் ஆல்பர்ட் ஜீவமணி, மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், வட்டார துணைத்தலைவர் ராஜேந்திரன், வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் தாஸ், செயல்தலைவர் சுரேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story