அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

ராசிபுரம், பள்ளிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதைதொடா்ந்து கட்சியினர் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.

நாமக்கல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேம்புசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் முருகேசன் மற்றும் பாலகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் விசுவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், காக்காவேரி கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்புசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்களாந்தபுரம் புஷ்பா மகுடீஸ்வரன், மோளப்பாளையம் மாதேஸ்வரி, போடிநாயக்கன்பட்டி பரமேஸ்வரி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் மல்லிகா சின்னதுரை, மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், செல்வி நல்ல தம்பி, அ.தி.மு.க. செயலாளர் கேட் கணேசன், சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துசாமி, நடேசன், நெடுஞ்செழியன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பேரவை செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்

இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதையொட்டி பள்ளிபாளையம் பஸ் நிலையம் 4 ரோட்டில் பள்ளிபாளையம் நகர ஒன்றிய அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், நகர பேரவை செயலாளர் சுப்பிரமணி, ஆலம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அ.தி.மு.க. பேரூர் கழகம் மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பில் அ.தி.முக. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையொட்டி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் எருமப்பட்டி பேரூர் கழக நகர செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான பாலுசாமி மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் கட்சினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story