பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்


பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
x

பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

யோகா தினம்

நாடு முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவை அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி மற்றும் சிறப்பு ஆசனங்களை செய்து மேற்கொண்டனர்.

இதில் அமெரிக்கா புளோரிடாவில் உள்ள வெடிக் வெல்நெஸ் பல்கழைக்கழக யோகா துறை பேராசிரியர் ஸ்ரீகுமார், உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மனோகர் சுதாகர் பாண்டி, பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வள்ளி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் செய்து இருந்தார்.இதுபோன்று கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அங்கு பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.

கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய கடற்படை பள்ளியில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டீன் நிர்மலா தலைமையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பலர் கலந்துகொண்டு யோகா செய்தனர். மேலும் கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி யோகா செய்தார்.

இதில் போலீசார் பலர் பங்கேற்று யோகா பயிற்சி மற்றும் பல்வேறு ஆசனங்களை செய்தனர். இதேபோல் கோவையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அதில் இதில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

----


Next Story