நல்லம்பள்ளியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நல்லம்பள்ளியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தர்மபுரி
நல்லம்பள்ளி
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதையடுத்து நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கம், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜோசப், பாசறை ஒன்றிய செயலாளர் திருமால்வர்மா, தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தங்கபாலு, ஒன்றிய பொருளாளர் மாது மற்றும் நிர்வாகிகள் அம்மாசி, பழனி, மணி, செல்லமுத்து, மூர்த்தி, பிரேம்குமார், பசுபதி, குணசேகரன், விஸ்வநாதன், துரைராஜ், தர்மலிங்கம், ஆறுமுகம், முரளி, செல்லமுத்து, அருண், சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story