முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க போலீசாரை பணியமர்த்தவில்லை


முக்கிய பிரமுகர்களின் காலணிகளை   பாதுகாக்க போலீசாரை பணியமர்த்தவில்லை
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருபூஜை விழாவின் போது முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க போலீசாரை பணியமர்த்தவில்லை என கலெக்டர், சூப்பிரண்டு விளக்கம் அளித்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூட்டாக வெளியிட்டு உள்ள ெசய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல்துறையினரையோ, வருவாய்த்துறையினரையோ, பேரூராட்சி துறையினரையோ பணியில் அமர்த்தவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Related Tags :
Next Story