வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சேக்அப்துல்லா மகன் அல்தூபி (வயது 20). சம்பவத்தன்று இவர் சிம்மக்கல் பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அல்தூபி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடியது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் 2 பேரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி விட்டார். பிடிபட்ட 2 பேரையும் திலகர்திடல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20), தாசில்தார் நகரை சேர்ந்த காட்வின்தாமஸ் (22), தப்பியவர் விஷ்வா என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






