தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது


தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
x

தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வாசு (வயது 25). டிரைவரான இவர் நேற்று முன்தினம் தைலாவரம் ஜங்ஷன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் வாசு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வாசுவிடம் செல்போன் பறித்த வழக்கில் தைலாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 21), ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதான ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story