விவசாயியை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு


விவசாயியை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு
x

விவசாயியை வழிமறித்து செல்போன், பணம் பறிப்பு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 45). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தார். கள்ளிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். தொடர்ந்து அவரை மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1,160 ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து உடனடியாக நெகமம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.

மேலும் பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். உடனே அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், தொண்டாமுத்தூரை சேர்ந்த அபிலேஷ்(27) என்பதும், மாரிமுத்துவிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story