விவசாயி வீட்டில் செல்போன் திருட்டு


விவசாயி வீட்டில் செல்போன் திருட்டு
x

விவசாயியின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து, செல்போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள போடுவார்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. (வயது 47) இவர், அதே ஊரில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை இவர், வீட்டை பூட்டி விட்டு கள்ளிமந்தையத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது, கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் செல்போன் திருடுபோயிருந்தது.

இதுகுறித்து கருப்புச்சாமி, சத்திரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்புச்சாமி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், தாழ்ப்பாளை உடைத்து வீட்டிற்குள் நுைழந்தனர். அப்போது விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கிடைக்காததால் செல்போனை மட்டும் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் கருப்புச்சாமி வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story