கட்டிடத் தொழிலாளியிடம் செல்போன் பறித்த செல்போன் திருடன், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்


கட்டிடத் தொழிலாளியிடம் செல்போன் பறித்த செல்போன் திருடன், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்
x

கட்டிடத் தொழிலாளியிடம் செல்போன் பறித்ததாக கைதான செல்போன் திருடன், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

செல்போனுடன் ஓட்டம்

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 26). கட்டிடத்தொழிலாளியான இவர், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் கட்டுமான வேலைக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து பஸ்சில் தாம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கினார்.

பின்னர் அங்கிருந்து கிழக்கு தாம்பரம் செல்வதற்காக மேம்பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அவசரமாக போன் பேசவேண்டும் எனக்கூறி அவரது செல்போனை வாங்கி பேசினார்.

பின்னர் திடீரென அந்த நபர், செல்போனுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தகவலை தெரிவித்து, செல்போன் திருடனை போலீசார் உதவியுடன் தேடினார்.

தப்பி ஓட்டம்

அப்போது தாம்பரம் சுரங்கப்பாதையில் படுத்து தூங்கிய செல்போன் திருடனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவில் வைத்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கணபதி (24) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கணபதி, யாருக்கும் தெரியாமல் போலீஸ் நிலையத்தின் முதல் தளத்தில் இருந்து நைசாக கிழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டான்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பல்வேறு பகுதிகளில் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தாம்பரம் பூ மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த செல்போன் திருடன் கணபதியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story