செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
x

ஜோலார்பேட்டை அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர் மீது புகார் அளிக்க போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் தரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர் மீது புகார் அளிக்க போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் தரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் கூடைவெட்டியான் வட்டம் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைத்தால் அதன் மூலம் இங்குள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என நிலத்தின் உரிமையாளரிடத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து நேற்று முன்தினம் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தில் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தின் உரிமையாளருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நில உரிமையாளர் மீது புகார்

இதனால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவரது மனைவி ஆகியோர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் போலீஸ் நிலையத்துக்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்வார்கள். அல்லது கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

இந்த சம்பவத்தால் போலீஸ்நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story