விக்கிரவாண்டி அருகே செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
விக்கிரவாண்டி அருகே செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த பேரணி கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மனுக்கு காலையில் பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவ அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story