பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவையில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 4 நாட்களில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

பள்ளி செல்லாத குழந்தைகள்

பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், இடைநின்ற மாணவ- மாணவி களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்க பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில் பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பை தொடர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பணிகளை அதிகாரி கள் இப்போதே தொடங்கி உள்ளனர். கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

செல்போன் செயலி

கோவை மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் 150-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள், வீதி வீதியாக சென்று எந்தவொரு குடியிருப்பையும் விட்டுவிடாமல் கணக்கெடுத்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்ய உத்தர விடப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் இடைநின்ற மாணவ-மாணவிகளின் பட்டியலை சேகரிக்கிறார்கள். பின்னர் அவர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்க ளின் உதவியுடன் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து வருகின்றனர்.

அப்போது இடைநின்ற மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் முறையாக ஆவணப்படுத்தி சர்வே என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

500 குழந்தைகள் மீட்பு

மேலும் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களின் புகைப் படங்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகளைஅருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 4 நாட்க ளில் 500 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை வரும் கல்வியாண்டில் தொடர்ந்து படிக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story