தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் மத்திய அரசு செயலாளர்கள் ஆய்வு


தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் மத்திய அரசு செயலாளர்கள் ஆய்வு
x

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் மத்திய அரசு செயலாளர்கள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேம்பாடுகள் தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஹித்தேஸ் குமார் மக்வானா மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் அலோக் ஆகியோர் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக கூடுதல் செயலாளர்களை மீட்பு படை மையத்தின் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் மற்றும் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர், கட்டிட இடிபாடுகளின் போது மீட்க உதவும் மோப்ப நாய்களின் செயல் விளக்கங்களையும், உயர் கட்டிடங்களில் சிக்கி தவிக்கும் மக்களை கயிறு மூலம் மீட்பது தொடர்பான செயல் முறைகளை வீரர்கள் செய்து காண்பித்தனர்.


Next Story