'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம் மத்திய அரசின் நிதி முழுமையாக மக்களிடம் சென்றடைகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி


டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் மத்திய அரசின் நிதி முழுமையாக மக்களிடம் சென்றடைகிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
x

கடந்த காலங்களில் மத்திய அரசின் நிதி மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான சுற்றுலா தொடர்பான ஜி-20 பணிக்குழு மாதிரி மாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் மத்திய அரசு மக்களுக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால், அதில் 15 பைசா மட்டுமே மக்களிடம் சென்றடைந்ததாக தெரிவித்தார். அதில் மீதம் உள்ள 85 பைசா முறைகேடாக எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம், மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் முழுமையாக மக்களிடம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்றடைவதாக தெரிவித்தார்.



Next Story