மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா


மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா
x

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தர்ணா போராட்டம்

கரூர் கோவை சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கரூர் மண்டல தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் திட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

கரூர் மண்டல செயலாளர் தனபால், நாமக்கல் திட்ட செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இதில் நாமக்கல் திட்ட தலைவர் சவுந்தரராஜன், பொருளாளர் முருகேசன், குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலிப்பணியிடங்கள்...

ஸ்மார்ட் மீட்டர் புகுத்துவதை ரத்து செய்திட வேண்டும். இ-டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் பெற்றிட வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்திட வேண்டும். பணியாளர்களின் இரட்டிப்பு ஊதியம், மருத்துவ செலவினங்கள், வருங்கால வைப்பு நிதி முன் கடன், இருசக்கர வாகன கடன், வீடு கட்டும் முன்பணம் ஆகியவற்றிக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். 1.12.2021-க்கு பின் 16.5.2023-க்கு முன் மின்வாரிய பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பலன் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்ததாக மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story