நெடுங்குன்றம் ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு


நெடுங்குன்றம் ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு
x

நெடுங்குன்றம் ஊராட்சியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் செயலாளர் ஸ்ரீ சைலேஷ் குமார் சிங் தலைமையில் மத்திய குழுவினர் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அப்போது அவர் வீடுகளை தரமாக கட்டி விரைவில் பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்து பாலா, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், ஊராட்சி துணைத் தலைவர் விஜயலட்சுமி சூர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், தண்டபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

போலீஸ் அகாடமியில்

முன்னதாக நெடுங்குன்றம் ஊராட்சிக்கு வருகை தந்த மத்திய குழுவினரை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். இதேபோல ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் மகளிர் சுயஉதவி குழு சார்பில் நடத்தப்படும் உணவகத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story