கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா நடைபெற்றது
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே சேர்வைக்காரன்பட்டியில் உள்ள மங்கிலியக்காரி அம்மன் கோவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் விழா ஆரம்பமானது. அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story