அமைதி கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்


அமைதி கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ்
x

வேலூர் ஜெயிலில் அமைதி கல்வி திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர்

சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ்பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் அமைதி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூரில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலிலும், பெண்கள் தனி சிறையிலும் இத்திட்டம் கடந்த 3-ந்தேதி தொடங்கப்பட்டது.

இதில் சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 2 வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி கலந்து கொண்டார். பயிற்சியில் கலந்துகொண்ட 150 கைதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story