ஓவிய பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்


ஓவிய பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ஓவிய பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூரில் உள்ள மாவட்ட மரச்சிற்ப கலைஞர்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு, விருக்சா மரச்சிற்ப பொதுப்பணிக்கூட்டமைப்பு கட்டடத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு சார்பில் ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) ஆரோக்கியசாமி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டு மரபு பாணி ஓவியம், நவீன பாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஓவியங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மரச்சிற்ப கலைஞர்கள் அய்யப்பா, ராஜப்பா, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் வடிவேல் நன்றி கூறினார்.


Next Story