பொறியியல் படிப்புகளில் சேர விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பத்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


பொறியியல் படிப்புகளில் சேர விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பத்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
x

பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு 2,442 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னை,

பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டில், விளையாட்டுப் பிரிவில் உள்ள இடங்கள் மூலம் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு 2,442 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் மூலம் படித்த விளையாட்டு வீரர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

1 More update

Next Story