கல்லாவி அருகே பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கல்லாவி அருகே பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
கல்லாவி அருகே உள்ள சாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சுகன்யா (வயது 33). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகன்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சுகன்யா தனது கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது கணவர் ஜனார்த்தனன், நண்பர்கள் கங்கன் (50), முருகேசன் ஆகியோர் சுகன்யாவை தாக்கினர். மேலும் சுகன்யாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுகன்யா கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜனார்த்தனன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story