பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்

சிவகங்கை

காரைக்குடி

குன்றக்குடி போலீஸ் சரகம் உ.சிறுவயல் பலவான்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மனைவி கண்ணம்மை (வயது 72). இவர் அருகில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தம்பி மகனுடன் மோட்டார் சைக்கிளில் தனது தம்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டு வாசலில் இறங்கியபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்ணம்மையின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story