மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
x

கோபால்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டியை அடுத்த கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜா. இவரது மனைவி நரசம்மாள் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நரசம்மாளின் கழுத்தில் இருந்த 2½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story