முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

திருக்காட்டுப்பள்ளி அருகே முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:-

திருக்காட்டுப்பள்ளி அருகே முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நடைப்பயிற்சி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது65). இவர் தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து மெயின் ரோடு வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி சம்பவத்தன்று காலையில் அவர் வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் முகவரி கேட்டுள்ளார். அவருக்கு ராஜேஸ்வரியும் விலாசத்தை கூறிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பதுபோல் நடித்து சங்கிலியை பறித்துச்சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story