பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

நெல்லை தச்சநல்லூரில் பெண்ணிடம் மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் வடக்கு சிதம்பரநகரை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மீனா (வயது 59). இவர் நேற்று முன்தினம் தச்சநல்லூர் மெயின்ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், மீனா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனை அறிந்த மீனா, சங்கிலியை இறுக்க பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இருந்தபோதும் சங்கிலியின் ஒரு பகுதியான சுமார் 1½ பவுனை மர்மநபர் பறித்து சென்றார்.

இதுகுறித்து தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

1 More update

Related Tags :
Next Story