ஊராட்சி மன்ற தலைவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு


ஊராட்சி மன்ற தலைவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
x

வார்டு உறுப்பினர் புகார் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு, ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தாமல், 5-வது வார்டு உறுப்பினர் சரவணனிடம் 10 மாதத்திற்கான கையொப்பம் கேட்டதாகவும், பழுதடைந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு முறைகேடாக பில் போட்டு பணம் எடுக்க முயற்சிப்பதாகவும், தீர்மான பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் பதவி நீக்கம் செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் வார்டு உறுப்பினர் சரவணன் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து உண்மை தன்மை அறிய ஊராட்சி மன்ற தலைவர் ராமு திங்கட்கிழமை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story