சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா: கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்- திரளான பக்தர்கள் தரிசனம்


சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா: கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்- திரளான பக்தர்கள் தரிசனம்
x

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கடந்த 26-ந் தேதி சுதர்சன யாகத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, திருவாரதனம், நீராட்டல், பூச்சூட்டல், கும்ப ஆராதனம், சதுர்வேத பாராயணம் ஆகிய வழிபாடு நடத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சுதர்சன யாகம் நிறைவு செய்யப்பட்டு, கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பிறகு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

விழாவில் திருக்கல்யாணம் நேற்று மாலையில் நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கல்யாணத்துக்கான சடங்குகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா, கோவிந்தா" என்று பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இரவில் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது.


Next Story