திருமோகூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா


திருமோகூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
x

திருமோகூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா

மதுரை

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சித்திரையை முன்னிட்டு மகா சுதர்சன யாகம் நேற்று நடைபெற்றது. வழித்துணையாக, வந்த பெருமாள் என்று ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்யதேசம் திருமோகூர் ஆகும். பெருமாளை தாயாக, தந்தையாக, நாயகி, நாயகனாக பாடிய ஆழ்வார்கள் திருமோகூர் கோவில் பெருமாளை மட்டும் நண்பனாக பாவித்து பாடியுள்ளனர். இங்குள்ள சக்கரத்தாழ்வார் 16 கைகளும் அந்த பதினாறு கைகளிலும் பதினாறு விதமான திவ்யாயுதங்களுடன் அருள் செய்கிறார். மற்ற கோவில்களில் சக்கரத்தாழ்வார் இருந்தபோதிலும் மந்திர எழுத்துக்களுடனும், ஆகமத்தில் சொல்லப்பட்டவாறு பரிபூரணமாக காட்சியளிப்பது இந்த கோவிலில் மட்டும்தான். இந்தநிலையில் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பிறந்த தினமான நேற்று (சித்திரை நட்சத்திரம்) உலக நன்மை வேண்டியும் மகா சுதர்சன யாகம், அலங்காரம், திருமஞ்சனம், திருவாராதனை மற்றும் கோஷ்டி ஆகியவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story