தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x

பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story