7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story