தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் வருகிற 3-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.