19- மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்


19- மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அக்டோபா் மாதம் தொடங்கி டிசம்பரில் வடகிழக்கு பருவமழை முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியும் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: *மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்"

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story