தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
x
தினத்தந்தி 24 Sept 2023 7:10 AM IST (Updated: 24 Sept 2023 7:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 35 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story