சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு


சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 Dec 2023 3:21 AM GMT (Updated: 15 Dec 2023 3:29 AM GMT)

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story